இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 113.68 கோடியைக் கடந்தது
புதுடெல்லி:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 113.68 கோடியைக் (1,13,68,79,685) கடந்தது. 1,16,73,459 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,134 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,73,890 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.28 சதவீதமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 143 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,28,555 ஆக உள்ளது; கடந்த 527 நாட்களில் இது குறைந்த அளவு. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.37 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 12,42,177 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 62.70 கோடி கொவிட் பரிசோதனைகள் (62,70,16,336) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 54 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.96 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.82 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 79 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 44 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
HCWs | 1st Dose | 1,03,80,957 |
2nd Dose | 93,53,906 | |
FLWs | 1st Dose | 1,83,74,594 |
2nd Dose | 1,62,19,699 | |
Age Group 18-44 years | 1st Dose | 43,57,31,810 |
2nd Dose | 17,67,65,054 | |
Age Group 45-59 years | 1st Dose | 17,90,55,132 |
2nd Dose | 10,67,80,250 | |
Over 60 years | 1st Dose | 11,21,81,588 |
2nd Dose | 7,20,36,695 | |
Total | 1,13,68,79,685 |
The recovery of 12,134 patients in the last 24 hours has increased the cumulative tally of recovered patients (since the beginning of the pandemic) to 3,38,73,890.
Consequently, India’s recovery rate stands at 98.28%.
No comments
Thank you for your comments