சோனியா காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
புதுடெல்லி, அக்.26-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம் இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று (26-10-2021) நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தை கட்சித் தலைவர் சோனியா காந்தி துவக்கிவைத்து சிறிது நேரம் பேசினார்.
அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன மத்திய அரசின் போருக்குக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மீட்பு நிவாரண முயற்சிகளை கட்சி இருமடங்காக உயர்த்த வேண்டும். மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தினந்தோறும் முக்கியமான செய்திகள் பத்திரிகை குறிப்புகள் ஆகவும், அறிக்கைகள் ஆகவும் வெளியிடப்படுகின்றன ஆனால் அவை கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு போய் சேர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தோ, ஒருமித்த திட்டமோ இருப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கியம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆகும் ஒவ்வொருவரும் கட்சியை வலுவாக கட்டியமைக்க பாடுபடவேண்டும் சொந்த தேவைகள் விருப்பங்களை பின்னுக்குத்தள்ளி கட்சியின் வலிமையைக் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நினைப்பதும் எளிதாக நடைபெறும் கட்சியும் ஒட்டுமொத்தமாக வலிமை பெறும்.
நம்முடைய கட்சி தொண்டர்களின் பயிற்சித் திட்டங்கள் மிகவும் அவசியம் முன்னுரிமை அடிப்படையில் கட்சித் தொண்டர்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகவும் பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எனவே கட்சியை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் வலுப்படுத்துவதாக அமையும் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மிகத்தீவிரமான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு நாம் அவர்கள் கூறும் பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். மக்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் முழு நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது தான் நமக்கு கிடைக்கும்.
நம்முடைய ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொரு குணப்படுத்துவதற்காக மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகிறது நம்முடைய ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்த அதன் மூலம் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை பண்புகளை முயற்சி நடக்கிறது அதன்மூலம் நிர்வாகத்தில் தளம் குறைந்தாலும் மக்களுக்கு தெரியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள் நம்முடைய ஜனநாயகத்தின் அடித்தளங்களை பாரதிய ஜனதா கட்சியினரும் அமைப்பினரும் கேள்விக்குறியாக்கி வருகின்றனர் என்று சோனியா காந்தி கூறினார்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் நம்முடைய கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் அந்த ஆலோசனைகள் அடிப்படையில் உருப்படியான கொள்கைகள் செயல் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் இவ்வாறு மக்களுடன் நடத்திய ஆலோசனைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கொள்கைகளையும் திட்டங்களையும் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்த வேண்டும் 5 மாநிலங்களிலும் இந்த வகையில் தான் நம்முடைய பிரச்சாரம் அமைய வேண்டும் என்று சோனியா காந்தி பேசினார்.

No comments
Thank you for your comments