Breaking News

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மரியாதை

இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் கட்சியினர் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காலை 9.40 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அமைச்சர்கள் பெரியகருப்பன் சாத்தூர் ராமச்சந்திரன் ராஜகண்ணப்பன் தங்கம்தென்னரசு மூர்த்தி கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் சக்கரபாணி மகேஷ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உடன் இருந்தனர்.

தொடர்ந்து முத்துராமலிங்கம் தேவர் இல்லத்தில் அவரது குடும்பத்தினரை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசினார் உடன் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

No comments

Thank you for your comments