கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அண்ணாத்த பட டிக்கெட்!
வேலூர், நவ.1-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஊராட்சியில் நடைபெற்ற 7வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,368 பேர் உள்ள மக்கள் தொகையில் 4,973 மாவட்டத்தில் நடைபெற்ற ஆறு முகங்களில் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். அதனையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது கொரோனா தடுப்பூசி தடுப்பு முகாமில் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 150 கோவாக்சின், கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு அதில் 128 பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
இதனையடுத்து பிரம்மபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், துணைத் தலைவர் சுந்தரராஜ் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 128 பெயரை எழுதி குலுக்கல் முறையில் 21 பேருக்கு வரும் நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணத்த திரைப்படத்தின் டிக்கெட் குலுக்கல் முறையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வரும் 4ஆம் தேதி காட்பாடி விஷ்ணு திரையரங்கில் திரையிடப்பட இருக்கும் திரைப்படத்தை காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் திமுக வார்டு உறுப்பினரும், ஒன்றிய துணை அமைப்பாளர் டீக்காராமன், ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் தனசேகரன், ஊராட்சி மன்ற செயலாளர் பஞ்சாட்சரம், மருத்துவர் ஹேமலதா, அங்கன்வாடி பணியாளர் யோகலட்சுமி, சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர், செவிலியர் தீபா, ஊர் பெரியோர்கள், வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments