Breaking News

தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் ஒன்றிய கவுன்சிலர்

 காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு 20ஆயிரம் நிதி உதவியுடன் 30ஆயிரம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை  ஒன்றிய கவுன்சிலர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் ஊராட்சி கலைஞர் தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குமரேசன். இவர் தனது மனைவி லலிதா மற்றும் மூன்று பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். 

குமரேசன், லலிதா ஆகிய இருவரும் பிள்ளைகளை குடிசை வீட்டில் விட்டுவிட்டு வழக்கம்போல் கூலிவேலைக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு மளமளவென எரிய தொடங்கியுள்ளது. 

இதனைக்கண்ட அப்பக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டில் இருந்து குழந்தைகளை வெளியேற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீட்டிலிருந்த உபயோகப்பருட்கள், குடும்ப அட்டை, உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து தீக்கு இரையானது.

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

சம்பவத்தை அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த அதிமுக 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் நிஷாந்த் மூர்த்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அரிசி பருப்பு மற்றும் உபயோக பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பையும், 20 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். 

மேலும் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.


 

No comments

Thank you for your comments