Breaking News

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வேலை-ரயில்வே துறை அறிவிப்பு

புதுடெல்லி:  

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்தவர்களில் 3,256 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரயில்வேயில் வேலை தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வற்புறுத்தி வந்தன.

கொரோனா பாதிப்பின் போது அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் பலர் கொரோனா தாக்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 3,256 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரயில்வேயில் வேலை தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வற்புறுத்தி வந்தன.

அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை உயிரிழந்து இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தினரின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதை ரயில்வே துறை பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலை வழங்க முடிவு செய்தனர்.

3,256 பேர் இறந்தாலும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கும் தகுதியை 2,800 பேர்தான் பெற்று இருந்தனர். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

🔥Also Read  👆  விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு 👍

இதில் பெரும்பாலும் கடை நிலை ஊழியர் பணி ஆகும். சிலருக்கு உரிய கல்வித்தகுதி இல்லை. தேவையான உயர் கல்வியை பெற்றதற்கு பிறகு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

சில குடும்பங்களின் வாரிசுகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்களுக்கு 18 வயதானதும் வேலை வழங்கப்படும். பெரும்பாலான வேலைகள் 4 மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments