Breaking News

மரக்கன்று மற்றும் விதைகளை இலவசமாக வழங்கி வரும் சமூக ஆர்வலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம் என்ற நோக்கில் கடந்த 5 வருட காலமாக பனை விதைகள், புளியங்கன்று, மாங்கன்று, தென்னங்கன்று மற்றும் பல மரக்கன்றுகள் மற்றும் விதைகளை அனைவருக்கும் இலவசமாக வழங்கிவருகிறார். 

மேலும் மரக்கன்றுகள் அல்லது விதைகள் தேவைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்புகொண்டு இலவசமாக மரக்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் மரம் வளர்ப்பு பற்றிய தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிப்பதன் மூலமாக இயற்கையை மேம்படுத்துவோம்.

No comments

Thank you for your comments