அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ளது சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம். இதன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்தில் சோதனையிட்டபோது துணை இயக்குநர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் குறித்த அலுவலக ஊழியர் மற்றும் துணை இயக்குனர் பழனியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இணை இயக்குநர் பழனியிடமிருந்து 1,66,900 , வட்டார மருத்துவ ஆய்வாளர் சீனுவாசன் இடமிருந்து ரூ 26, 490 மற்றும் வட்டார மருத்துவ ஆய்வாளர் இளங்கோவின் மிகுந்து ரூ8900 என மொத்தம் ரூ2,02,290 கைப்பற்றப்பட்டுள்ளது.
இப்பணம் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க இப்பணம் பெறப்பட்டதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
No comments
Thank you for your comments