கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நகர பொறுப்பாளர் வினோத் தலைமையில் நடைபெற்றது
இதில் இந்து பண்டிகைகள் கோவிலில் மீது நம்பிக்கை இல்லை ஆனால் உண்டியல் பணம் நகைகள் மட்டும் தேவையா.
பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக வழங்கிய நகைகளை அடையாளம் தெரியாமல் உருக்கி அவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாதே....
நகைகளை உருக்காமல் அப்படியே வைத்தால் பணம் தர மாட்டார்களா.. ஆனால் அதிலிருந்து வைரம், வைடூரியம், கோமேதகம் எங்கே போகும்....
கோவில் பணத்தை கோவிலுக்கே செலவு செய்யப் போவதாக சொன்னீர்கள் அப்படி என்ன புதிதாக செய்யப்போகிறீர்கள் என்று முன்பே அறிவிக்க முடியுமா...
எந்த கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்று எந்த ஆவணமும் இல்லாத போது அவற்றை உருக்க போகிறோம் என்றால் நோக்கம் புரிகிறதா...
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கடவுள் சாத்தியமாக இதில் எந்த ஊழலும் நடக்காது என்று கூறுவதுதான் மிகவும் சந்தேகத்தை தருகிறது.....
கோவில் பூஜைகள் பாரம்பரியம் இவற்றில் தலையிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சட்டமும் நீதிமன்றமும் கூறும் நிலையில் அவற்றை மதிக்காமல் பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல்களை செய்வது நியாயமா..?
இதில் மணிகண்டன், வேட்டக்குடி எழிலரசன், விக்னேஷ், ராஜேந்திரன், யோகேந்திரன், ஆர்எஸ்எஸ் தேவசிகாமணி உள்ளிட்ட இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments