அதிக அளவு காவல்துறையினர் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மலைகிராம மக்கள்!
ஆம்பூர், அக்.4&
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மற்றும் பனங்காட்டேரி மலைவாழ் மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடமும் பலமுறை நேரில் சென்று முறையிட்டனர்.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி சமயத்தில் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மற்றும் பனங்காட்டேரிமலைகிராம மக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து வரும் நிலையில், திடீரென மலை கிராமத்திற்கு அதிக அளவிலான காவல்துறையினர் வருவதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்புராஜ் மற்றும் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர் கிராம மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தி வாக்களிப்பது ஜனநாயக கடமை என எடுத்துரைத்தனர்.
No comments
Thank you for your comments