வாக்கு எண்ணும் மையத்தில் திமுக, அதிமுகவினர் இடையே கைகலப்பு..!
கரூர், அக்.13-
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் திமுக - அதிமுகவினர் இடையே கைகலப்பு உருவானது.
கரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில், வாக்குப்பெட்டிகளை மேஜைகளில் அடுக்கி வைக்கும் போது, ஊராட்சி வாரியாக மேஜைகளில் வைத்து எண்ண வேண்டும் எனக் கூறி திமுகவினர் & அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாக்குச்சீட்டை பூத் ஏஜெண்டுகளிடம் சரியாக காட்டவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இருமுறைக்கு மேல் மை வைக்கப்பட்ட சீட்டுகள், சரியாக ஓட்டு விழாத சீட்டுகளை காத்திருப்பு பகுதியில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
❀❀❀❀❀
வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதம்
அசந்து தூங்கிய அரசு ஊழியர்..!
திருக்கோவிலூர், அக்.13-
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதமானதால், தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர் அசந்து தூங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாக்கு பெட்டிகளை ஊராட்சி வாரியாக மேஜைகளில் அடுக்கி வைத்து, வாக்கு எண்ணிக்கை துவங்க 11 மணி ஆகிவிட்ட நிலையில், காலை 8 மணியில் இருந்தே மையத்தில் காத்திருந்த தேர்தல் பணியாளர்களில் சிலர் அசந்து களைப்புடன் காணப்பட்டனர். அதில் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே உறங்கினார். அத்தோடு, அதே மையத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி மாயமானதால் வாக்கு பெட்டி கட்டிங் பிளேடு வைத்து உடைத்து திறக்கப்பட்டது.
No comments
Thank you for your comments