ராஜமாதா விஜய ராஜே சிந்தியா பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
புதுடெல்லி, அக்.13-
ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
“ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நாளில் அவருக்குப் புகழ்மொழிகள். அவரது வாழ்க்கை முழுவதும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.
அவர் துணிச்சலானவர், அன்பானவர். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு கட்சியாக பிஜேபி வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ராஜமாதா அவர்களைப்போன்ற அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் மக்களிடையேயும் கட்சியை வலுப்படுத்தவும் செய்த பணிகளாகும்” என்று பிரதமர் டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments