தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களாள் போக்குவரத்து இடையூறு
திருவள்ளூர், அக்.7-
திருவள்ளூரில் ஒருசில மிகப்பெரிய உணவகங்கள் பிரதான சாலைகளில் இயங்கிவருகின்றன குறிப்பாக திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பூர் சீனிவாசா மற்றும் ஹோட்டல், கங்கா ஸ்வீட் ஸ்டால் மற்றும் உணவகம் இவைகள் பார்க்கிங் வசதி இருப்பதாக குறியீடு இருந்தாலும் அனைத்து வாகனங்களிலும் சாலையில் பார்க்கிங் செய்வதால் அரசு விதித்துள்ள விதிமுறைகளை அலட்சியப்படுத்தி போக்குவரத்திற்கு உட்படுத்தப்பட்ட அளவுகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஒரு வழி சாலை போல் போக்குவரத்துக்கு ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு ஊழியர்கள் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நபர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த உணவகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சாலைகளில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக செய்யும் வகையில் அவர்களே வாகனத்தை நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
🔥Also Read 👆 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு 👍
எனவே இந்த உணவகங்கள் மீது மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்த வழியே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று வரும்போது கூட இது கண்களில் புலப்படவில்லையோ என கேள்வி எழுந்துள்ளது..
🔥Also Read 👆ஆள் கடத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கேட்டு முறையீடு👍
🔥Also Read 👆 அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா - ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு 👍

No comments
Thank you for your comments