மலைத்தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழப்பு
ஈரோடு, அக்.6-
மலைத்தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழந்தார். மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே எல்லை குமாரபாளையம் என்ற கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பலர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தேனீக்கள் கூட்டம் பணியாளர்களை திடீரென தாக்கத் தொடங்கியது.
தேனீக்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்களை தேனீக்கள் கொட்டியதால் பழனிச்சாமி (80) என்பவர், தேனீக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த குட்டையில் குதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஓட்டம் பிடித்த 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களை தேனீக்கள் கொட்டியதால் 17 பேர் பெருந்துறையில் உள்ள ஈரோடு சேனிடோரியம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments