Breaking News

பணம் இல்லாத வீட்டை பூட்ட வேண்டாம் - துணை ஆட்சியருக்கு கடிதம் எழுதிய திருடன்

போபால்:  

மத்திய பிரதேசத்தில் திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடனின் செயல் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார்.

அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸார் வந்து சோதனை நடத்தியதில் ஒரு கடிதம் அவர்கள் கையில் சிக்கியது. அதில், பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டு இருந்தது. 

இந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடனின் செயல் அப்பகுதி மக்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியது. 

No comments

Thank you for your comments