Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட 'சேர்மேனாக' மனோகரன்தேர்வு

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட சேர்மேனாக படப்பை மனோகரன் மறைமுக வாக்கெடுப்பு மூலம்  தேர்ந்தெடுக்கப் பட்டார்.

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 9ம் தேதி என  இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. 

12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்படு, முடிவுகள் வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலராக நித்யா, ராஜலட்சுமி, ராமமூர்த்தி, பால்ராஜ், அரி, மனோகரன், அமுதா, பொற்கொடி, வனிதா, பத்மா மற்றும் சிவராமன் என 11 பேர்  வெற்றிப் பெற்றனர். 

இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான நாராயணன் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். 

இன்று ( 22ம் தேதி ) மாவட்ட சேர்மேன் பதவிக்கு மேற்கண்ட அலுவலகத்திலேயே மறைமுக வாக்கெடுப்பு காலை 10.30 மணிக்கு துவங்கியது. 

அப்போது பரபரப்பான சூழ்நிலையுடன் மாவட்ட ஒன்றிய அலுவலகம் காணப்பட்டது. 11 கவுல்சிலர்களும் ஆஜராகி தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்த்தி, வாக்குப் பெட்டிகளில் இருந்த, வாக்கு சீட்டுகளை கவுன்சிலர்கள் முன்னிலையில் மேசையில் கொட்டி எண்ணினார். 

இதில், 11 ஓட்டுக்களும் கவுன்சிலர் மனோகரனுக்கு போடப்பட்டிருந்தது. இதையடுத்து மனோகரன் மாவட்ட சேர்மேனாக வெற்றிப் பெற்றார் என அறிவிக்கப்பட்டார். 

சிறிது நேரத்தில் மனோகரனுக்கு மாவட்ட சேர்மேனாக வெற்றிப் பெற்றதற்கான சான்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட துணைத் தலைவருக்கான வக்கெடுப்பு மேற்கண்ட அலுவலகத்தில்  நடத்தப்பட உள்ளன.

No comments

Thank you for your comments