Breaking News

செத்தும் சுகமில்லை... சுடுகாடு இல்லாததால் சடலங்களை ஆற்றில் புதைக்கும் அவலம்... 36 ஆண்டு கால தொடர்கதை... செவிசாய்க்குமா திமுக அரசு


வேப்பூர்

பா.கொத்தனூர் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால் சடலங்களை ஆற்றில் புதைக்கும் அவலம்  தொடர்கதையாக உள்ளது..

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா  பா. கொத்தனூர் கிராமத்தில் ஆதிதிராவிட பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் 

இப்பகுதியை சேர்ந்த சுமார் 36 ஆண்டு காலமாக இறந்தவர்களை  புதைப்பதற்கு மயானம் இல்லாத காரணத்தால் ஆற்றில் புதைத்து வருகின்றனர் .

 பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும்  இல்லை... 

சில சமயங்களில் மழை காலங்களில் ஆற்றில்  தண்ணீர் நிரம்பி வழியும் போது இறந்தவர்களின் உடலை புதைத்து விட்டு வருவதற்குள் வேறு ஒரு இடத்திற்கு தண்ணிரில் சடலம் அடித்து சென்று விடும், மீண்டும் அதை எடுத்து வந்து புதைக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.

இன்று அக்டோபர்  26 ந் தேதி  அய்யாதுரை என்பவரின்  மனைவி அங்கம்மாள் (வயது 60)  என்பவர் உடல் நல குறைவால்  இறந்தார் அவரது உடலை புதைப்பதற்கு அக்கிராம இளைஞர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் தூக்கி சென்று ஆற்றின் நடுவில் அடக்கம் செய்தனர்

பா.கொத்தனூர் கிராமத்தில்  இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய கடலூர்  மாவட்ட நிர்வாகம் சுடுகாடு அமைத்து தர நடவடிக்கை எடுக்குமா ..? 

இல்லை வழக்கம்போல், 36 ஆண்டு கால தொடர்கதையாக இருக்கும் அவலநிலை தொடருமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍



No comments

Thank you for your comments