Breaking News

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை பரிசு... மக்கள் ஆரவாரம்...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை பரிசாக வழங்கப்பட்டது.

கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்தும் விதமாக ஓன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத்தலைவர்  ஏற்பாடு.


கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும்தான் ஒரே தீர்வு என்ற நிலையில் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதை நாடு முழுவதும் தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் 7-வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 550 இடங்களில் தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிராமப்புற மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய பல்வேறு உத்திகளை கையாண்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 100%  கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கிராம மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப் படுத்தும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் ஆகியோர்  ஏற்பாட்டின் பேரில்  இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட  கிராம மக்களுக்கு 13 லட்சம் மதிப்பில் 25 கிலோ கொண்ட 1000 மூட்டை தடுப்பூசி செலுத்திக்கொண்டே நபர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டையை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

அரிசி மூட்டை பரிசாக வழங்கப் படுவதை ஒட்டி ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டு அரிசி மூட்டையை பரிசாக பெற்று செல்கின்றனர்.

முத்தியால்பேட்டை ஊராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிசி மூட்டை பரிசாக வழங்கப்படும் சம்பவம் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments

Thank you for your comments