Live Updates: நடிகர் புனித் ராஜ்குமார் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம்
பெங்களூரு:
புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் (வயது 46) அக்.29ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் கெலாட், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக அக்.29ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு.... அண்ணா... என்று கண்ணீர்விட்டு கதறினர்.
பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படி வந்து அஞ்சலி செலுத்தினர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீஸார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சியில் அதை நேரலையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், போலீஸ் அமைச்சர் அரக ஞானேந்திரா உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், அலி, தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., ராதிகா குமாரசாமி, பவித்ரா லோகேஷ், ரஷிதா ராம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Actor #PuneethRajukumar was laid rest to with full state honors in Bengaluru..
— Ramesh Bala (@rameshlaus) October 31, 2021
His demise not only shocked and saddened movie industry.. It went beyond state borders and common citizens are affected knowing what a great human he was.. pic.twitter.com/v7yfixJwsC
Karnataka: The last rites of Kannada actor #PuneethRajkumar were performed at Sree Kanteerava Studios in Bengaluru today with state honours. pic.twitter.com/mzk5m9GoBR
— ANI (@ANI) October 31, 2021
Karnataka | Admirers of actor Puneeth Rajkumar have put up posters of him with garlands at many places in Kalaburagi to mourn his death. pic.twitter.com/B0ICWOAbgz
— ANI (@ANI) October 30, 2021
Deeply shocked and appalled to hear about the sudden demise of Power Star Puneeth Rajkumar who is also the son of late legendary Kannada star Rajkumar avargal. Both our families share a cordial bond for many decades. Thus, it's a personal loss to me. pic.twitter.com/AFXqF34L6z
— M.K.Stalin (@mkstalin) October 29, 2021
It's a personal loss to me. We have lost a very great talent: Karnataka CM Basavaraj Bommai, in Bengaluru#PuneethRajkumar https://t.co/VEV84pnAMO
— ANI (@ANI) October 31, 2021
Karnataka: People gather on terraces of the buildings around Sree Kanteerava Studios in Bengaluru and climb trees around it to catch a glimpse of late Kannada actor #PuneethRajkumar. His last rites will be performed at the Studios today. pic.twitter.com/gUILlsz3UK
— ANI (@ANI) October 31, 2021
#PuneethRajkumar… It’s too.. too difficult to still believe my dear .. we will miss you Appu ..Thank you for all the good vibes you shared n inspired. “ ತಂದೆಗೆ ತಕ್ಕ ಮಗ “🙏🏻🙏🏻🙏🏻#RIP pic.twitter.com/PsI1qqUEeI
— Prakash Raj (@prakashraaj) October 31, 2021
@alluarjun taking about #PuneethRajkumar friendship and bonding with him is huge loss of Indian film industry #PuneethRajukumar #PuneethRajkumar #Poshmark #PunithRajkumar #appufan @PuneethRajkumar #AppuBoss #AppuBoss #AppuRIP #AppuForever love you BOSS pic.twitter.com/m1VbKkrext
— Keerthi yadav Dboss (@keerthiAB17VK18) October 30, 2021
It's a great loss to Kannada film industry...losing our Appu, the Power Star of Karnataka. He was very close to our family... Many memories with him, right from his father Rajkumar's times: Actor Chiranjeevi on the demise of Kannada actor Puneeth Rajkumar (30.10) pic.twitter.com/M7GsxYKwHT
— ANI (@ANI) October 30, 2021
#Chiranjeevi #Venkatesh paid homage to #PuneethRajukumar Consoled #Shivarajkumar #RIPPuneethRajkumar #PuneethRajkumar pic.twitter.com/GTo8wbJokU
— BA Raju's Team (@baraju_SuperHit) October 30, 2021
Gone too soon... Listen to these kind words by him #PuneethRajkumar #RestInPeace #GoneTooSoon #kannadaSuperstar pic.twitter.com/MP5ae593GS
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) October 29, 2021
Karnataka | Choreographer and director Prabhu Deva today paid last respects to late actor #PuneethRajkumar at Kanteerava Stadium in Bengaluru
— ANI (@ANI) October 30, 2021
It is a very sad day. I have no words to explain this loss, he says. pic.twitter.com/QY1xDNm5Yf
Sometimes we don’t value the moment, till it’s gone 😭😭😭#Appu #Puneethrajkumar #kannadafilmindustry cannot comprehend this at all. pic.twitter.com/Zasg5px1Vl
— Radikaa Sarathkumar (@realradikaa) October 29, 2021
Unable to come to terms with this loss! Farewell dear Puneet Rajkumar, my brother & fellow traveller… I will always cherish your fond friendship and brotherhood. My deepest condolence to family & friends. I’m just devastated & still in shock. pic.twitter.com/G9zfmY9VlU
— Suriya Sivakumar (@Suriya_offl) October 29, 2021
Omg it’s a huge loss. I’m still in shock. I share the pain of the family, friends and all the fans who love him as their own. #PuneetRajkumar pic.twitter.com/6AAMdgnlWd
— Actor Karthi (@Karthi_Offl) October 29, 2021
No comments
Thank you for your comments