Breaking News

புளிய மரத்தில் வேன் மோதி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

விருத்தாசலம் :

விருத்தாசலம் அருகே புளிய மரத்தில் வேன் மோதி 20க்கும் மேற்பட்டோர் காயம்... அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி இவரது பேத்தி பிறந்தநாள் விழாவிற்காக தொழுதூர் பூண்டி கிராமத்திற்கு  பிறந்தநாள் கொண்டாட சென்றுகொண்டிருந்தனர்.

வேன் கண்டபங்குறிசி தே.புடையூர் கைகாட்டி  அருகே வந்தபோது ரோட்டில் எல்லுகாய் காயவைத்துக்கு கொண்டிருந்தனர். அப்போது  ஒரு சிறுமி ரோட்டை கடக்க ஓடியுள்ளார். 

அதனால், வேன் ஓட்டுனர் பிரேக் அடித்து இடதுபுறமாக திருப்பியுள்ளார். இடதுபுறம் உள்ள புளிய மரத்தில் வேன் மோதி  20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.

🔥Also Read  👆  விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு 👍

பின்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  வேன் புளியமரத்தில் மோதி 20 - மேற்பட்டோர் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments