Breaking News

தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே... இபிஎஸ் கடும் சாடல்

சென்னை:

நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தனுஷ் தற்கொலை செய்துக்கொண்டதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை சாடியுள்ளார்.


இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் சேலம் மேட்டூர் அடுத்த கூழையூரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து என வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்த போதிலும் நீட் தேர்வுக்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.

இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டதாவது, 

அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


No comments

Thank you for your comments