வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை
வடசென்னையில் ஒட்டேரி முதல் மணலி வரை 7 இடங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இன்று(28.09.2021) காலை 10.30 மணி முதல் வடசென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீரை அகற்றும் வெள்ள தடுப்பு பணிக்காக, ஓட்டேரி நல்லா கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை மிதவை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீரை அகற்றும் வெள்ள தடுப்பு பணிக்காக, தண்டையார்பேட்டை மண்டலம்ஸ கொடுங்கையூர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள், ஆகாயதாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை ரொபாடிக் மல்டிபர்பஸ் எஸ்கலேட்டர் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு, மாநகராட்சி உயர் அலுவலர்கள் உள்ளனர்.
முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட இடங்கள்:
மண்டலம்-5: காந்தி இர்வின் சாலை - ஜோதி வெங்கடாசலம் சாலை சந்திப்பு, பூந்தமல்லி நெடுஞ்சாலை
மண்டலம்-5: ஸ்ட்ரான்ஸ் சாலை ( கொன்னூர் சாலை சந்திப்பு, ஓட்டேரி நல்லா பாபா நகர் மூன்றாவது பிரதான சாலை,
கொளத்தூர், மண்டலம்-பிரிடானியா நகர் (Britainia Nagar), 40 அடி பிரதான
மண்டலம்-2: புழல் உபரி கால்வாய், அமுல்லவாயல் (எஸ்.ஆர்.எப். நிறுவனம் எதிரில்)
மண்டலம்-4: கொடுங்கையூர் கால்வாய், சின்னன்டி மடம் (Chinnandi Madam)
மண்டலம்-4: இணைப்பு கால்வாய் (கேப்டன் காட்டன் கால்வாய்)
கொடுங்கையூர் கால்வாய் ஆகிய 7 இடங்களில் ஆய்வு செய்தார்.



No comments
Thank you for your comments