பெற்ற சுதந்திரம் பேணிகாக்கப் படுகிறது.. ஆம்.. இல்லை... பட்டிமன்றம்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை சார்பில் கப்பலோட்டி தமிழன் வ. உ. சி. 150 -ஆவது பிறந்த நாள் மற்றும் பாரதி நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில், வ. உ. சி. மற்றும் பாரதி ஆகியோர்களின் பதாகை ஏந்தி அணி வகுத்து வந்தனர். மேலும், மாணவர்கள் வ. உ. சி , பாரதி போன்ற வேடம் அணிந்து வந்தனர்.
வழக்கறிஞர் பூமாலை. குமாரசாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏ. கே. சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன், வழக்கறிஞர் தனவேல், முன்னாள் கரும்பு ஆய்வாளர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை அமைப்பாளர் ஓவியர் மோகன் வரவேற்று பேசினார்.
வ. உ. சி. படத்தை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இராமு, கவிஞர் பாரதியின் படத்தை கணேஷ்குமார், ஶ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ஞானமூர்த்தி சிறப்பு பட்டிமன்றத்தை தொடக்கி வைத்தார்.
பட்டிமன்ற நடுவர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில், "பெற்ற சுதந்திரம் பேணிகாக்கப் படுகிறது" என்ற தலைப்பில் ஆம்.. இல்லை என்று இரு அணியினர் பங்கேற்று பட்டிமன்றம் நடைப்பெற்றது.
ஆம் – என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் டேவிட்சன், செல்வி. சஞ்சனா பிரபு ,
இல்லை – என்ற தலைப்பில் ஆசிரியர் பாலமுருகன், வழக்கறிஞர் கி.அருண் ஆகியோரும் வாதிட்டார்கள்.
No comments
Thank you for your comments