Breaking News

கழிவு நீர் மற்றும் மழை நீர் கால்வாய் தூர் வாரும் பணி துவக்கம்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின் பெயரில் கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைப்பெற்று வருகிறது.

கடந்த ஐந்தாண்டு காலமாக தூர் வாராமல் கால்வாய்கள் இருக்கின்றன. மழைகாலம் என்பதால் சகதிகளின் அடைப்புகளால் தண்ணீர் சரவர செல்லமுடியாமல் தேங்கி நிற்கும். இதனால் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்படும்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறையினரும் ஒன்றுசேர்ந்து கழிவு நீர் மற்றும் மழை நீர் கால்வாய் தூர்வார வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். 

உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்  முன்னிலையில் ஆணையர் சிவக்குமார் நகரமைப்பு அலுவலர் தினகர் பொறியாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணியில் செயல்பட்டனர்.

இவர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன வரும் மழைக் காலங்களில் வீடுகளில் நீர் தேங்காமல் இருக்கவும் சாலைகளில் தண்ணீர் நிற்காமல் இருக்கவும் இந்த பணிகளை செய்து வருவதாக அமைச்சர் சாமு நாசர்   தெரிவித்தார்.

No comments

Thank you for your comments