Breaking News

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்

சென்னை 

போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவர் தொடர்புடைய நிறுவனங்கள், சென்னையில் உள்ள வீடு என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

 இந்நிலையில் கரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி முன்னிலையில், அல்லது சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 30ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

No comments

Thank you for your comments