Breaking News

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது ரவி தேஜாவின் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


ஜி.வி.பிரகாஷ் இசை, நடிப்பு என இரு ட்ராக்குகளில் பல வருடங்களாக வெற்றிகரமாகப் பயணிக்கிறார். தமிழ் டப்பிங் படங்கள் மூலமும், தெலுங்கு நேரடிப் படங்கள் வழியாகவும் தெலுங்குப்பட ரசிகர்களுக்கு இவர் ஏற்கனவே பரிட்சயமானவர். 

சுமார் 7 வருட இடைவெளிக்குப் பின் ஜி.வி.பிரகாஷ் நேரடி தெலுங்குப் படம் ஒன்றுக்கு இசையமைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இடி முழக்கம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த ஜெயில் திரைப்படமும், பேச்சிலர் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளன. பல படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். 

இவர் கடைசியாக இசையமைத்த நேரடித் தெலுங்குப் படம் 2015-ல் வெளிவந்த நானி நடித்த ஜன்டா பாய் கபிராஜு படமாகும். 7 வருட இடைவெளிக்குப் பின் இப்போது ரவி தேஜாவின் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் பட இசையமைப்பாளர்கள் தெலுங்கில் இசையமைப்பது தொன்று தொட்டே நடந்துவரும் விஷயம். ஜி.வி.பிரகாஷ், அனிருத், சாம் சிஎஸ் என பலரும் தெலுங்கில் இசையமைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments