Breaking News

கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை போலீசார் பிடித்து கைது

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்த 

விருத்தாசலம் விளாங்காட்டூர் காசிவேல் மகன் பிரதீப் (வயது -20),

சென்னை 71 திருவேற்காடு வடிவேல் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது -17), 

சென்னை திருவேற்காடு பாலாஜி மகன்  விஜய் (வயது -17) ஆகிய மூவரும் விருதாச்சலம் காவல் எல்லைக்கு உட்பட்ட விருதாசலம் பஸ்நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். 

அவர்களை விருத்தாசலம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை செய்த போது அவரிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கொளஞ்சி மகன் மணிகண்டன் (வயது -22)   என்பவரையும் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சென்னை திருவேற்காட்டில் ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுதங்கள் வாங்கி செல்வதாக கூறினார்.

இவர்கள் நான்கு பேரையும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆதி, ஜம்புலிங்கம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், தனிப்பிரிவு காவலர் பாலமுருகன்,  தலைமை காவலர் இளங்கோவன், ஜெயபால், சரஸ்வதி, உள்ளிட்ட காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்



 

No comments

Thank you for your comments