தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களை அவசரமாக தரையிறக்க மத்திய அரசு அனுமதி
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்திய ராணுவ போர் விமானங்களை அவசரமாக தரையிறக்குவதற்கான வசதியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி ஆகியோர் இன்று (9-9-2021) தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து ஜக்குவார் போர் விமானம் தேசிய நெடுஞ்சாலை இறங்கு தளத்தில் தரையிறங்கி பயிற்சியில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் - இந்தியா எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையின் அவசரகால இறங்குதளம் திறக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில்,) போர் விமானங்கள் இறங்குதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய விமானப்படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதுரியா ஆகியோரை சுமந்தபடி சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானம் பயிற்சியில் ஈடுபட்டு தரை இறங்கியது.
ஜாக்குவார் ரக போர் விமானங்களும் அவசரகால இறங்குதளத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் எல்லை அருகே பார்மர் மற்றும் ஜாலூர் மாவட்டங்கள் இடையே அவசரகால இறங்குதளம் அமைந்துள்ளது.
இது போன்ற ராணுவத்தின் அவசர தேவைகளுக்கு ஏற்ப குந்தான்புரா, சிங்கானியா மற்றும் பகசார் கிராமங்களில் 3 ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் மேற்கு சர்வதேச எல்லையில் இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு வசதியையும், பாதுகாப்பு வளையமைப்பையும் வலுப்படுத்தும்
No comments
Thank you for your comments