ரூட் தல .. மாணவர்களின் மோதல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு
சென்னை:
மாணவர்களின் மோதல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் மோதல் சம்பவங்களை தடுக்க போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கல்லூரி வாசல்களிலும், மாணவர்களின் பஸ் வழித்தட பகுதிகளிலும் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக ரகளை செய்யும் மாணவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல’ என்று கூறிக்கொண்டு அடிக்கடி பஸ்களில் மோதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் மாணவர்களின் ரகளை கட்டுக்குள் வராமலேயே உள்ளது.
இந்நிலையில் கீழ்ப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டியாக பள்ளி மாணவர்களும் நேற்று ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை எம்கேபி நகரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி மாநகர பேருந்து 2ஏ. நேற்று யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. ராஜா அண்ணாமலை சாலை பஸ் நிறுத்தத்தில் நின்ற போது பள்ளி மாணவர்கள் கூரையில் ஏறினார்கள். பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி சாலையில் கால்களை தேய்த்துக் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பேருந்தில் இருந்த பயணிகளும், ஓட்டுனரும் கண்டித்துள்ளார். 'நாங்கள் அப்படித்தான் செய்வோம்' என்று வாக்குவாதம் செய்து பள்ளி மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
இதனை தட்டிக்கேட்ட டிரைவர் மோகனகிருஷ்ணனை மாணவர்கள் கல் வீசி தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று புரசைவாக்கம் பகுதியில் இதேபோல் பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை கண்டித்த பேருந்து ஓட்டுனர் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் நடந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு கல்லூரி மாணவர்களும் சில இடங்களில் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களில் மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பஸ் பயணத்தின் போது மோதல் சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சென்னை மாநகர போலீசார், கல்லூரிகள் திறக்கப்பட்ட உடனேயே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை பற்றிய தகவல்களை இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் மாணவர்களின் மோதல் சம்பவங்களை தடுக்க போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கல்லூரி வாசல்களிலும், மாணவர்களின் பஸ் வழித்தட பகுதிகளிலும் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக ரகளை செய்யும் மாணவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களின் மோதல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பஸ் எண்களின் அடிப்படையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் அனைத்திலும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் சுமார் 100 ‘ரூட் தல’ மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முதலில் அறிவுரை வழங்க வேண்டும். பின்னர் அந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் மூலமும் எச்சரிக்கை விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அதன் பிறகும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கட்டுக்குள் வரவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். தினமும் காலை, மாலை வேளைகளில் 50-க்கும் மேற்பட்ட வீடியோ குழுக்களை அமைத்து கல்லூரி மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் இந்த குழுவினர் வீடியோ பதிவையும் செய்து வருகிறார்கள். சென்னையில் உள்ள கல்லூரிகள் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘எல்லை மீறும் மாணவர்கள் மீது தயவுதாட்சண்யம் காட்டப்படாது. நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

No comments
Thank you for your comments