கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளமாறு பொதுமக்களிடையே காவல்துறையினர் தீவிர பிரச்சாரம்
காஞ்சிபுரம்
உத்தரமேரூரில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களிடையே இருசக்கர வாகனங்களில் உத்தரமேரூர் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் , பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உத்தரமேரூர் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில்- மைக் பொருத்தி, மூன்றாம் அலையின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வத்துடன் முன் வருவதால் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி,, தமிழகத்தில் கொரோனா- தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் மாநிலம் முழுதும் இன்று நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் 15 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுளளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.



No comments
Thank you for your comments