குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு
புதுடெல்லி, செப்.23-
தமிழக ஆளுநராக பதவி ஏற்ற நிலையில், ஆர்.என். ரவி டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநராக பொறுப்பேற்ற நிலையில் முதன்முறையாக இன்று காலை அவர் டெல்லிக்கு சென்றார்.
இன்று மாலை 5.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். சந்தித்தார்.
நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Shri R.N. Ravi, Governor of Tamil Nadu, called on President Kovind at Rashtrapati Bhavan. pic.twitter.com/vInAC5NWCM
— President of India (@rashtrapatibhvn) September 23, 2021

No comments
Thank you for your comments