ஜோதி பவுண்டேஷன் சேவையை பாராட்டி ஜோதி ராஜனுக்கு தன்னலமற்ற சேவகர் விருது...
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் கூட்டமைப்பின் மாவட்ட அளவிளான கூட்டம் மயிலாடுதுறை ஆதி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் வருகை புரிந்து சிறப்புரையாற்றினார்.
மேலும், இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக சேவை புரிந்து வரும் ஜோதி பவுண்டேஷன் அமைப்பின் தன்னலமற்ற சேவையை பாராட்டி, அதன் நிறுவனர் ஜோதி ராஜன் அவர்களுக்கு தன்னலமற்ற சேவகர் விருதை, தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர் .சேகர், மகளிரணி பூங்கோதை, ஆனந்த ஜோதி, பொறுப்பாளர்கள் கோமல் குமார். ஜெக முருகன், ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments