இருசக்கர வாகனத்தின் பெட்டியை திறந்து திருட முயன்ற மூன்று பேர் கைது
விருத்தாசலம்:
வேப்பூர் அருகே வங்கி முன் நின்ற இருசக்கர வாகனத்தின் பெட்டியை திறந்து திருட முயன்ற மூன்று பேர் கைது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த. நடேசன் பிள்ளை மகன் வெங்கடேசன் (வயது 56), ஆரோக்கியா பால் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்து பணியிலுள்ள இவர் ஆகஸ்ட் 31ம் தேதி பால் உற்பத்தியாளர்களுக்கு பணபட்டுவாடா செய்ய வேண்டி இருந்ததால், வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் ஸ்டேட் பேங்கிற்கு தனது இருசக்கர வண்டியில் சென்று வங்கியில் ரூ.45 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்து அதை வண்டி பெட்டியில் வைத்துக்கொண்டு வேப்பூர் வந்துள்ளார்
வேப்பூர் அருகே தனது இருசக்கர வாகனம் பஞ்சரானதால் வாகனத்தை சித்ரா சைக்கிள் கடை அருகே நிறுத்திவிட்டு, வண்டி பெட்டியிலிருந்த பணத்த எடுத்து கொண்டு தனது நண்பரான துரைசாமி மகன் பச்சமுத்து என்பவருடன் பக்கத்து கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு, திரும்ப வரும்போது வண்டியின் பெட்டியை கள்ளசாவி போட்டு திறந்து கொண்டு இருந்தனர்
அவர்கள் மூன்று பேரையும் பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
பின்னர் போலிசார் விசாரணை செய்ததில்,
பெரம்பலூர் மாவட்டம், அறும்பாவூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் (வயது35),
பாரிவள்ளல் மகன் பாரதிராஜா (வயது26),
சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ரவிசந்திரன் மகன் சித்துராஜா (வயது 26),
என்றும் விசாரணையில் தெரியவந்தது. மூன்று பேரும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்ததால் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

No comments
Thank you for your comments