Breaking News

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவியேற்பு

அகமதாபாத், செப்.13-

காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர பட்டியலுக்கு ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத் இன்று (திங்கட்கிழமை)  மாலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குஜராத் மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

குஜராத் மாநில உதவி முதல்வராக இருந்த நித்தின் பட்டேல் இந்த முறையும் உதவி முதல்வராக நீடிக்க வேண்டுமா என்று ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர்கள் பட்டியல் குறித்து ஆழ்ந்த விவாதம் நடந்த போதிலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக தலைவர்கள் மீது எந்த புகாரும் இருக்கக்கூடாது என்பதில் பாஜக தலைவர்கள் தெளிவாக கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனால் முதலமைச்சர் தவிர மற்ற அமைச்சர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அன்று முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மட்டும் பதவி ஏற்பது என்றும் பின்னர் இன்னொரு நாளில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் பதவி எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதனால் முதல்வர் பூபேந்தர் படேல் மட்டும்  முதல்வர் பதவி பொறுப்பை இன்று ஏற்றுக் கொண்டார்.

No comments

Thank you for your comments