Breaking News

வட்ட சட்டப்பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம்:

வட்ட சட்டப்பணிகள் குழு விழிப்புணர்வு முகாம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.



மாண்புமிகு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி அம்மா மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர்/சார்பு நீதிபதி அம்மா திருமதி D.ஜெயசூரியா அவர்களின் வழிகாட்டுதலின் படி சட்ட விழிப்புணர்வு முகாம்   விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்றது

இந்நிகழ்வில் விருதாச்சலம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் B - பட்டியல் வழக்கறிஞர் அசோக்குமார் கலந்து கொண்டு 

கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களுக்கும் மைனர் குழந்தைகளுக்கும் ஜீவனம்சம் பெறவும்; 

கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் ஜாமீன் எடுக்கவும்;

கிரிமினல் வழக்கு நடத்தவும் சொத்துரிமை மற்றும் வாடகை பிரச்சினைகளால் பாதிக்க பட்டவர்கள் வழக்கு நடத்தவும்;

வரதட்சணை கொடுமைகளுக்கு ஆளாகி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சாலை ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு தரவும்;

தொழிற்சாலைகளில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ஒரு லட்சம் மிகாமல் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைக்குழு ஏழைகள் ஆனாலும் அவர் தம் குழந்தைகளுக்கு நிவாரணம் காண நீதிமன்றங்களுக்கு செல்ல அவர்களுக்கு உதவி புரிவர் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட மற்றும் வட்ட குழுக்கள் துணையுடன் செயல்படுகிறது

இதில் ஏழை மக்கள் இலவசமாக சட்ட ஆலோசனை பெறவும் வழக்குகளை நடத்தவும் நீதிமன்றங்கள் வசதி உள்ள எல்லா ஊர்களிலும் சட்டப்பணிகள் குழு செயல்பட்டு வருகிறது

இதற்காக நலிந்தோர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது இல்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

No comments

Thank you for your comments