Breaking News

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா

சண்டிகர், செப்.29-

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று (28.9.2021) ராஜிநாமா செய்தார்.

2022ம் ஆண்டு பஞ்சாபில் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி பொறுப்பேற்ற நவ்ஜோத் சிங் சித்து இரண்டே மாதங்களில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க  அம்ரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி  ஆகியோர் ஆதரவவோடு நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானர்.


👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

தொடர்ந்து அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவியதையடுத்து கடந்த வாரம் பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அம்ரிந்தர் சிங் ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராகுல்காந்தி, சித்து ஆதரவோடு சரண்ஜித் சிங் சன்னி  செப்டம்பர் 20ம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

நேற்று டெல்லி சென்றுள்ள அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜிநாமா செய்தவாகவும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேவை யாற்றுவேன் எனவும் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருப்பது அரசியில் தலைவர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments