Breaking News

உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவோம்- வீறு கொண்டு எழும் விஜயகாந்த்...

சென்னை:

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம் என்று டிவிட்டர் பதிவில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. ஆண்டுதோறும் கட்சியின் தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று கட்சி அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் திரண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.

இதையொட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சி தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற தேர்தல்களில் நமது பலத்தை காட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க. தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.

இவ்வாறு விஜயகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.

துபாயில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments