Breaking News

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை... தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள் அவலம்...

அரியலூர், செப்.14-

அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தேர்வு பயத்தால்  தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் 12-9-2021 அன்று நடைபெற்றது. மொத்தம் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு எழுதினார். வினாத் தாள் மிகவுன் கடினம் என்று அவர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

நீட் தேர்வு எழுதிய நாள் முதல் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ? என்ற பயத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 

இந்நிலையில், மாணவி கனிமொழி இன்று (14-9-2021) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதினார். தேர்ச்சி பேறவில்லை.

இந்த முறை 'நீட்’ எழுத விண்ணப்பம் செய்திருந்தார்.  ஆனால் தேர்வுக்கு அஞ்சி தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை (12-9-2021) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழி  தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தற்கொலைகள் தொடர்ந்து அரகேறிவருகின்றன... மிகவும் வேதனையாக உள்ளது. 

மருத்துவ படிப்பை காட்டிலும் சிறந்த பல்வேறு படிப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கையின் புரிதலையும் உணர்ந்த வேண்டும்..  

தோல்வி பயத்தை காட்டிலும் சுற்றியிருக்கும் ஜனங்களில் சமூதாய விமர்சனங்களுக்காகவும் சில பிள்ளைகள் பயந்து இதுபோன்றதொரு  முடிவை நாடுகின்றனர்...  என்பது வேதனையாக உள்ளது... 

No comments

Thank you for your comments