பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 8 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பெருநகர் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) பாஸ்கரன் ( 45 ) த/பெ.கிருஷ்ணன், மேட்டுத்தெரு, ரவத்தநல்லூர், உத்திரமேரூர் தாலுக்கா
2 ) சசிகுமார் ( 41 ) த/பெ.தர்மலிங்கம், வடக்குத்தெரு, அழிச்சூர் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா
3) செபஸ்டின் (35) த/பெ.சுப்பரமணி, மாதாகோயில் தெரு, மானாம்பதிகண்டிகை, உத்திரமேரூர் தாலுக்கா
4) ஜெயக்குமார் த/பெ.டில்லிபாபு, நெ.23, பெருமாள் கோயில் தெரு, பட்டாங்குளம் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா
5) தினேஷ் குமார் ( 27 ) த/பெ.சுப்பிரமணி, நெ.18, மெயின்ரோடு, பருத்திக்கொள்ளை கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா
6 ) முருகன் த/பெ.மாரி, நெ.4, மாதிரியம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், பருத்திக்கொள்ளை கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா
7) அங்கமுத்து த/பெ.பெருமாள், மாரியம்மன் கோயில் தெரு, பருத்திகொள்ளை கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா மற்றும்
8) அஜித் (எ) அஜித்குமார் த/பெ.வினாயகம், வண்ணாரத்தெரு, உத்திரமேரூர்
ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி உத்திரமேரூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments