Breaking News

காட்பாடியில் மின்சாரம் பாய்ந்து 7 மாத சினை பசு உயிரிழப்பு

வேலூர்:

காட்பாடியில் மின்சாரம் பாய்ந்து 7 மாத சினை பசு உயிரிழந்தது .

காட்பாடி ராஜாஜி நகரில் கணக்கர் தெரு 7சி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த பழனி வயது 51 இவர் கூலி வேலை செய்து வருகிறார்.  பசு மாடு வளர்த்து வருகிறார். பால் கறந்து விற்பணை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரது பசுமாடு ஏழுமாத கர்பமாக  இருந்தது. இதற்கிடையில் அந்த பசுமாடு புல் மேய்ந்து கொண்டிருந்த போது மாநகராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் டேங்க் அருகில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது. அந்த மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

Click here 👉 வரி பங்கீடு விவாதமும் -  நிதிஅமைச்சர் கூறியது   சரியான பதிலா?

பசுமாட்டிற்கு மதிப்பு சுமார் ரூ. 70 ஆயிரம் ஆகும்.  முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எனக்கு இழப்பீடு தொகையாக கொடுத்து எனது வாழ்வை ஒளியை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பழனி, முதல்வர் தனிப்பிரிவு அரசு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments