Breaking News

அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

சென்னை, செப்.13-

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி திங்களன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.


அண்ணா பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் ஒன்று - தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments