200 செல்போன்கள் கண்டுபிடிப்பு...
கிருஷ்ணாகிரி:
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து சுமார் 200 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்காக தனிப்படை உதவி காவல் ஆய்வாளர்கள் R. ரவி ஊத்தங்கரை காவல் நிலையம், சிற்றரசு காவல் உதவி ஆய்வாளர் மத்திககிரி காவல் நிலையம், கார்த்திக் காவல் உதவி ஆய்வாளர் கெலமங்கலம் காவல் நிலையம், ஆகியோரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் தொலைத்துப்போன செல்போனை பெற்றுக்கொண்ட அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு நன்றியை தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments