ரூபாய் 1,70,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்... கடையின் உரிமையாளர் உட்பட இருவர் கைது
காஞ்சிபுரம்
ரூபாய் 1,70,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்திரவிட்டார்.
அதனடிப்படையில், காஞ்சிபுரம் உட்கோட்டம் சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, சாலவாக்கம் பஜாரில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கானாராம் ( 40 ) த/பெ.பொன்னாராம் மற்றும் சுத்ரா ராம் ( 22 ) த/பெ.கன்லால் ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூபாய்.1,70,000/- மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சாலவாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அவரின் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
மேலும், பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
புகார்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்
044- 27238001
044- 27236111

No comments
Thank you for your comments