பெங்களூருவில் 144 தடை நீட்டிப்பு
பெங்களூரு, செப்.29-
ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் 11/10/2021 ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அடுத்த மாதம் 11/10/2021 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் வருகிற 11ம் தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
பெங்களூருவில் கொரோனா காரணமாக 27ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கிறது. கொரோனா காரணமாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் 11/10/2021 ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு பஸ், ரயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments
Thank you for your comments