பிரபல டிவி தொகுப்பாளர்-நடிகர் மரணம்.. அதிர்ச்சியில்... ரசிகர்கள்...
சென்னை
பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார்.
சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றர். இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர், சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
A great friend a great human is no more!! #RIPanandakannan my deepest condolences pic.twitter.com/6MtEQGcF8q
— venkat prabhu (@vp_offl) August 16, 2021
மேலும் ரசிகர்கள் பலர் #RIPanandakannan என்ற ஹேஸ்டேகில் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனந்த கண்ணன் வாழ்க்கை ஒரு பார்வை
சிங்கப்பூரில் வசித்து வந்த தமிழன் ஆனந்த கண்ணன்.
அங்குள்ள வசந்தம் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன் பின்னர் சென்னை வந்த இவர் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராகவும் ஆனார்.
90’ஸ் குட்டிகளின் பேவரைட் விஜே ஆனார். இவருக்கு நிறைய ரசிகர்கள் ரசிகைகள் உருவாகினர்.
சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் & விக்ரமாதித்தன் என்ற சீரியலில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் நடித்தார். பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையவே மீண்டும் சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்றி வந்தார்.
கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளையும் இவர் முறையாக பயின்றுள்ளார். இவர் பயின்ற கிராமியக் கலைகளை, `ஆனந்தக் கூத்து’ என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சிங்கப்பூரில் பயிற்சி மையம் அமைத்து சொல்லிக் கொடுத்தார். சிங்கப்பூரில் இதுவே எனக்கு மகிழ்ச்சி. இதுவே என் அடையாளம்” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
#AnandhaKannan Bro Heart Breaking news we missed you!!!
— Senthilkumar (@cmpasenthil) August 16, 2021
May your soul rest in peace!
My deepest condolences to your family.
The days were with you in my life so beautiful proud moment and good memories!!!
I were in your timeline really big gift for me Bro!@anandha_kannan pic.twitter.com/g6n5ythUZN
Those wer the times wen u hardly had any music channels completely dedicated to Tamil Songs..and then came @SunMusic and some young adults whom each one of us could relate to..Ananda Kannan was top on that list..90s kids favourite VJ..#RIPanandakannan #anandakannan#sunmusic pic.twitter.com/PMW5DSyUhM
— CL Ramakrishnan (@kishen05journo) August 16, 2021
Shocked beyond words. Popular VJ and Actor #AnandaKannan passed away. Our deepest condolences to his family members and friends. May his soul rest in peace. #RIPAnandaKannan pic.twitter.com/6PxHckFpW4
— Actor Vijay Team (@ActorVijayTeam) August 17, 2021
A sweet brother a great human is no more!! #RIPanandakannan #Anandakannan @anandha_kannan 💔 pic.twitter.com/cvsA85gmrk
— Kumaran (@DirKumaran) August 16, 2021

No comments
Thank you for your comments