விருத்தாசலத்தில் விதைத் திருவிழா கண்காட்சி
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விதைத் திருவிழா நடைபெற்றது
கடலூர் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் இயற்கை முறையில் தானியங்களை விளைவிப்பதற்கு அனைத்து விதமான பயிர்கள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை ஒரே இடத்தில் பெற்றிட விதைத் திருவிழா விவசாய சங்கத்தின் சார்பில் ஓட்டேரி சிவகுமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆடிப்பட்டம் தேடி விதை நாடி வருகிறது நாட்டு விதை என்கின்ற முழக்கத்தோடு விதை கண்காட்சி நடைபெற்றது. இதில் இயற்கை உரங்கள் இயற்கை நெல் விதைகள் இயற்கை பயிர் விதைகள் இயற்கையான காய்கறிகள் கவிதைகள் இங்கு கடைகளாக போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விதையின் கண்காட்சி திருவிழாவில் கலந்து கொண்டு ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
No comments
Thank you for your comments