பி.டெக்., பி.இ., பட்டம் வாங்கியவர்கள் மற்றொரு பி.டெக்., பி.இ., படிக்கலாம்
சென்னை, ஆக.17-
ஏற்கனவே பி.டெக். பி.இ. பட்டம் வாங்கியவர்கள் மற்றொரு பி.டெக் /பிஇ பட்டம் பெற கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் அனுப்பலாம். அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய துறைகளில் மாணவர்கள் படித்து பட்டம் பெற அனுமதி வழங்கலாம் என்று தமிழகத்திலுள்ள தொழிற் கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் (AICTE) சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த சுற்றறிக்கை மாணவர்களுக்கு பயன்படும் என்று நான் கருதவில்லை மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று ஆழம் கே குரூப் துணைத் தலைவர் ஆர் எம் கிஷோர் தெரிவித்தார்.
இந்தப் புதிய சுற்றறிக்கையினால் மாணவர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை என சாஸ்த்ரா நிறுவனத்தின் துணைவேந்தர் எஸ் வைத்திய சுப்பிரமணியன் தெரிவித்தார். தொழிற்கல்வி கற்றுத்தரும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சில கல்லூரிகளின் தலைவர்கள் கருத்து கூறினார்கள்.
இந்த சுற்றறிக்கையை பற்றி ஏஐசிடிஇ தலைவர் அனில் டி.சகஸ்ர புத்தே கூறும்பொழுது, சில மாணவர்கள் கூடுதல் பட்டம் வாங்க படிக்க விருப்பம் தெரிவித்தனர் அவர்களுக்கு கல்லூரிகள் அனுமதி வழங்கவில்லை அவர்களை ஏன் நாம் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது பல துறைகள் ஒருங்கிணைந்து வகையில் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது அவ்வாறு ஒருங்கிணைந்த வகையில் செயல்பட்டால்தான் அறிவைப் பெற இயலும் என்று குளோபல் எஞ்சினியரிங் டீன் ஸ்கவுனசில் செயலாளர் கே மணிவண்ணன் கூறினார்.

No comments
Thank you for your comments