ஆப்கானிஸ்தான் நிர்வாகப் பொறுப்பை ஏற்க தலிபான் தீவிரம்...
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் புறநகர் பகுதிகளில் தலிபான் படையினர் ஞாயிற்றுக்கிழமை குறைந்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கனி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சிலருடன் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றில் புறப்பட்டார்.
அவர் காபூல் விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் விமான நிலையத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. தரை இறங்கிய சிறிது நேரத்தில் வேறு ஒரு இடத்துக்கு அவரது விமானம் புறப்பட்டுச் சென்றது. அஷ்ரப் கனி எங்கு புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
அஷ்ரப் கனி புறப்பட்டு சென்ற தகவல் வெளியானதும் தலிபான் மிலிட்டரி கமிஷன் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்து சென்றார்கள்.
தலிபான் மிலிட்டரி கமிஷன் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையிலேயே பாதுகாப்பை உறுதி செய்ய பவுல் நகரத் தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் எல்லாம் தலிபான் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். காபூல் நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலிபான் படையினர் காவல் பணியினை மேற்கொண்டு உள்ளனர் என்று தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானத்தில் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடாமல் தடுப்பதற்காக காபுல் நகரத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அஷ்ரப் கனி பின்னர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
அஸ்ரப் கனியுடன் ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சாலே ட்விட்டரில் ஒன்றை பதிவு செய்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் பயங்கரவாதிகள் நான் தலை வணங்க மாட்டேன் என்னுடைய குருவான அகமதாபாத் அம்மாவுக்கும் அவரது பாரம்பரியத்துக்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்.
நான் கூறியதை கேட்ட பல லட்சக் கணக்கானவர்களை ஒருபோதும் ஏமாற்றத்தில் வாழ்த்த மாட்டேன். விமான அமைப்பு ஒரே கூரையின் கீழ் அமர்ந்து ஆப்கானிஸ்தானத்தில் நாங்கள் இயங்க மாட்டோம் என்று சாலே கூறியுள்ளார்.
தலிபான் அமைப்பினருடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை என்பதை இந்த ட்விட்டர் பதிவு காட்டுகிறது.
இதற்கிடையில் கத்தார் நாட்டின் தலைநகராகிய தோகாவில் தலிபான் அமைப்பினருக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை தொடர்வதற்காக ஆப்கானிஸ்தானத்தில் இருந்து, தேசிய சீரமைப்பு கவுன்சில் தலைவரான அப்துல்லா அப்துல்லா கத்தார் நாட்டுக்கு தனது குழுவுடன் பிரிந்து சென்றுள்ளார்.
மிகவும் சிக்கலான நேரத்தில் ஆப்கானித்தான் மக்களை விட்டு விலகி சென்றுவிட்டார் என்று அப்துல்லா குறை கூறியுள்ளார். அவரது இந்தச் செயலுக்காக அல்லாஹ் ஒருபோதும் அவரை மன்னிக்க மாட்டார் என்றும் அப்துல்லா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைகள் வழியாக பலர் பாகிஸ்தானிலும் ஈரானிலும் புகுந்துள்ளனர். பாகிஸ்தானும். ஈரானும் கட்டுப்பாடுகளையும் எல்லையில் விதிக்கவில்லை.

No comments
Thank you for your comments