Breaking News

இரு சமூகத்தினரிடையே மோதல்..!-போலீஸார் குவிப்பு

கடலூர், ஆக.3-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி முகாம் சார்பில் ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த பணி விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுவர் விளம்பரம் எழுதும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஆதிக்கசாதியினர் தினேஷ், பிரகாஷ், குணசேகரன், சபரி, லோகநாதன், கந்தசாமி, கோபால் உள்ளிட்டோர் இங்கு விளம்பரம் விடக்கூடாது பரத்தேவடியா பசங்களுக்கு இங்கு என்ன வேலை என்று சாதியை சொல்லி திட்டி இரவு 10 மணி அளவில் கட்டை, இரும்பு பைப் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விமல்ராஜ் உள்ளிட்ட 4 பேரை கண்மூடித்தனமாக தாக்கியதில் தலை கழுத்து கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு  4 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை கடலூர்  மாவட்ட செயலாளர் பாலா அறவாழி, விருத்தாசலம் நகர செயலாளர் முருகன், தொகுதி செயலாளர் ஐய்யாயிரம், ஒன்றிய துணை செயலாளர் தென்றல், கம்மாபுரம் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், நெய்வேலி அசுரன், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய பொருளாளர் எழில் வான் சிறப்பு நேரில் சென்று ஆறுதல் கூறினார்

இது பற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து கமலேஷ் குமார் கந்தசாமி சுரேஷ்குமாரை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்

No comments

Thank you for your comments