Breaking News

கருவேல மரங்களை அகற்ற மெகா திட்டம் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதை மிகப்பெரிய திட்டமாகவே நிறைவேற்றுவோம் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார் .


தமிழக சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் கரி. ராமசாமி மகன் கரி. மாணிக்கம், நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கையின் போது பேசினார்... 

அப்போது குறுக்கிட்டு அவரை பாராட்டிய அவை முன்னவர் துரைமுருகன்,

கரியமாணிக்க அம்பலம் இந்த சட்டசபையில் அங்கம் வகித்தவர், அவருடைய மகனான கரி. ராமசாமி இதே அவையில் இருந்தவர், இப்போது கரி.ராமசாமியின் மகன் கரி. மாணிக்கம் உறுப்பினராக இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் சட்டசபையில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

அவர் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விடுகிறது, வெள்ளத்தின் போது அடித்து செல்லப்பட்டு,வயல்களில் பரவுகிறது, அதன் மூலம் வயல்களில் மட்டுமல்ல:  ஏரிகளில் கால் வைக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது, எனவே கருவேலமரங்களை அகற்றுவதை ஒரு திட்டமாகவே நிறைவேற்ற இருக்கிறோம், அதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்,

No comments

Thank you for your comments